புற்று நோயாளர்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார்கள் என்பது தொடர்பில் துல்லியமான எதிர்கூறல்களை வெளியிட முடியும் என கனடிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய புற்றுநோய் பிரிவு என்பன கூட்டாக இணைந்து ஓர் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவை கொண்ட புதிய தொழில்நுட்பம் ஒன்றின் ஊடாக புற்று நோயாளர்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார்கள் என்பது குறித்து துல்லியமான மதிப்பீடுகளையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 06 மாதங்கள், 36 மாதங்கள் அல்லது 60 மாதங்கள் உயிர் வாழ்வார்களா? என்பது தொடர்பில் 80 வீத துல்லிய தன்மையுடன் எதிர்வு கூற முடியும் என கனடிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
natural-language processing என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த செயற்கை நுண்ணறிவு கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 50,000 நோயாளிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக புற்றுநோயாளர் ஒருவரின் ஆயுட்காலம் தொடர்பில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் துல்லியமான எதிர்ப்பு கூறல்களை வெளியிட முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.