பீல் பிராந்தியத்தில் முன்பதிவு நியமனங்களை ஏற்க, ஆறு கொவிட் தடுப்பூசி மருந்தகங்கள் தயாராகி வருகின்றன.
பீல் பிராந்தியத்தில் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மருந்தகங்களில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கான சந்திப்புகளை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த ஆறு தடுப்பூசி மருந்தகங்கள், 75 முதல் 79 வயதுடையவர்களுக்கு நியமனங்களை ஏற்கத் தொடங்கும்.
75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பராமரிப்பாளர்கள் இந்த நேரத்தில் தடுப்பூசி பெற தகுதியற்றவர்கள் என்று தெரிவிக்கபடுகிறது.
இணைய முன்பதிவு முறையை அணுக முடியாத எவரும், வாரத்தின் 7 நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 905-791-5202 என்ற எண்ணில் 905-791-5202 என்ற எண்ணில் பிராந்தியத்தின் பீல் கொவிட்-19 தடுப்பூசி உதவித் தொடர்பை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வில்லியம் ஒஸ்லரின் சிங்குவா கவுஸி வெல்னஸ் சென்டர் மற்றும் பிராம்ப்டன் சிவிக் மருத்துவமனை மற்றும் ட்ரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ் மிசிசாகா மருத்துவமனை மற்றும் ரொறொன்ரோ பல்கலைக்கழகம், மிசிசாகா (யுடிஎம்) தளங்களில் அமைந்துள்ள மருந்தகங்கள் சனிக்கிழமை முதல் முன்பதிவுகளை எடுத்து வருகின்றன.