Reading Time: < 1 minute

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு நீதிக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ போராட்டங்களின் ஊடாக 12,000 டொலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.

பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவான போராட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை மொன்றியல் தீவில் நடைபெற்றன.

பாயிண்ட் கிளாரிலுள்ள வலோயிஸ் பூங்காவில் 500இற்க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் முழங்காலிடக் கூடினர். கறுப்பு, பழங்குடி மற்றும் நிற மக்களுக்கு ஆதரவைக் காண்பிப்பதற்காக ‘வெஸ்ட் ஐலேண்ட் டேக்ஸ் எ நீல்’ ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்தின் அமைப்பாளர் ஷீடா ரபாபியன் கூறுகையில், ‘போராட்டங்களின் ஊடாக 12,000 டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன. அவை பல்வேறு சமூக அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

இந்த நிகழ்வு அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதையும், உலகத்தை அதன் எழுச்சியில் அடித்து நொறுக்கிய இனவெறி எதிர்ப்பு மற்றும் பொலிஸ் எதிர்ப்பு மிருகத்தனமான போராட்டங்களின் அலைகளுக்காக வருந்திடவும், பிரதிபலிக்கவும் ஒரு வாய்ப்பைக் குறிப்பதாக’ கூறினார்.