கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அவசர சேவை அழைப்பு எண் (911) செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமையன்று திடீரென இந்த செயலிழப்பு காரணமாக அழைப்பு மேற்கொண்டவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
அழைப்புகளுக்கு பதிலளித்தல் தொடர்பிலான கால தாமதம் குறித்து அவசர அழைப்பு பிரிவு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது.
மிகவும் அவசரத் தேவையில்லை என்றால் இணைய வழியாக தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டிருந்தது.
சேர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு சேவைகளை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் 911 என்ற அவசர அழைப்பு இலத்திற்கு வருடாந்தம் இரண்டு மில்லியன் அழைப்புக்கள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவம், பொலிஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.