கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குளிப்பதற்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளது அல்லது அதிக அளவு நீரை பயன்படுத்தி குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சி நிலைமையை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாகாண மக்கள் முடிந்த அளவு நீரை சேமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
மாகாணத்தின் 34 நீர் நிலைகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட நீர் நிலைகளில் வறட்சி நிலமைக்கு நிகரான நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே முடிந்த அளவு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்களை கழுவுதல் தொடர்பிலும் முடிந்த அளவு சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு மாகாண அரசாங்கம் கோரியுள்ளது.
கடந்த ஆண்டில் மிகக் குறைந்த அளவு மழை பெய்த காரணத்தினால் இவ்வாறு வரட்சி நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வறட்சி நிலமையே நீடித்தால் நீரை பாதுகாப்பது தொடர்பான தற்காலிக சட்டங்களை அமுல்படுத்த நேரிடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து மக்களுக்கும் குடிநீர் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்யக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அறிவித்துள்ளது.
மக்கள் தன்னார்வ அடிப்படையில் நீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கம் மக்களிடம் கோரியுள்ளது