Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயண வரலாறு இல்லாத பெண்னொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃப்ரேசர் ஹெல்த் பிராந்தியத்தில் வசிக்கும் 50 வயதான பெண்ணுக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பெண் மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளுடனோ அல்லது நோய் ஹொட் ஸ்பொட்களிலிருந்து திரும்பும் நபர்களுடனோ தொடர்பு கொள்ளவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நோயாளி எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி கூறுகின்றார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் முதல் வெளிப்படையான வழக்கு இதுவென அதிகாரிகள் இதனை விபரிக்கின்றனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ள எட்டு பேரை இணங்கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.