பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல் ஹைபிரிட் மின்சார படகுகள், விக்டோரியா- ஓக்டன் பாயிண்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இன்று (சனிக்கிழமை) காலை குறித்த படகுகள் கொண்டுவரப்படவுள்ளன.
குறித்த படகுகள் ஒவ்வொன்றும் 47 வாகனங்கள் மற்றும் 450 பயணிகளை வைத்திருக்கும் திறன் கொண்டவை ஆகும்.
குறித்த படகு இயங்குவதற்கு, மின்கலங்களில் சேமிக்கப்படும் மின்சாரத்தை உருவாக்க டீசல் எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது.
குறித்த ஹைபிரிட் மின்சார படகுகளின் விலை 86.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டிஷ் கொலம்பியா ஃபெர்ரிஸ் தலைவர் மார்க் கொலின்ஸ் கூறுகையில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.சி.பெர்ரிஸ் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களில் 500 மில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்துள்ளதாகவும், நிறுவனம் நிகர பூஜ்ஜிய கார்பன் தடம் கொண்ட எதிர்காலத்தை இலக்காகக் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரையோர சார்ஜிங் உட்கட்டமைப்பு கிடைக்கும் வரை குறித்த படகுகள் இடைவெளியைக் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.