கனடியர் ஒருவர் உலகின் முன்னணி இணைய தளமொன்றை நம்பி 7700 டொலரை இழந்துள்ளார்.
புகிங் டொட் கொம் (Booking.com) இணைய தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்த அதி சொகுசு விடுதியொன்றுக்கு பணம் செலுத்தி இவ்வாறு பணத்தை இழந்துள்ளார்.
ஒன்றாரியோவைச் சேர்ந்த பெரி குடெ என்ற நபரே இவ்வாறு மோசடியில் சிக்கியுள்ளார்.
குறித்த இணைய தளத்தில் இந்த ஆரட்ம்ப விடுதிக்கு 9.8 என்ற அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன. விடுதியின் உரிமையாளருடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
விடுமுறையை கழிப்பதற்காக இந்த விடுதியை கொடே பதிவு செய்திருந்தார்.
இணையத்தில் பட்டிலிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட விடுதியின் தோற்றத்திற்கும் நேரில் பார்த்த விடுதிக்கும் தொடர்பில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இணைய தளத்தின் ஊடாக முழுக் கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளாது தனிப்பட்ட ரீதியில் உரிமையாளருக்கு பணம் செலுத்தியதனால் , இணைய தள நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எவ்வாறெனினும் குறித்த பணத்தை மீள செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புகிங் டொட் கொம் நிறுவனம் தெரிவித்துள்ளது.