பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓட்டாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ள ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை பிக்கப் வாகனம் கொண்டு மோதி சேதப்படுத்திய நபர், வளாகத்துக்குள் நுழைந்து பிரதமர் ட்ரூடோ குடியிருப்பு நோக்கி சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் ஆயுதப்படையை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரின் மேற்படி விபரங்கள் தெரியாத நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தனது வேலையை இழந்ததற்காக பிரதமர் ஜஸ்டினிடம் விரக்தியை வெளிப்படுத்த அவர் குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால், விபத்து நடந்தபோது ஜஸ்டின் ட்ரூடோ அங்கு இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.