டொரோண்டோ பெரும்பாகத்தில், பாரவூர்திகளை இலக்குவைத்து விசேட போக்குவரத்து பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் காவல்துறையினரால் இன்று முன்னெடுக்கப்படுகின்றன.
டொரோண்டோ, யோர்க், பீல், ஹோல்ட்டன் ஆகிய பிராந்தியங்களின் காவல்துறையினருடன், ஒண்டாரியோ மாகாண காவல்துறை, மாகாண போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இன்று காலை மிசிசாகாவில் ஆரம்பித்த இந்த கண்காணிப்புக்களில், அனைத்து வகையான வர்த்தக வாகனங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன.
பாரவூர்திகள் பாதுகாப்பானவையா என்பதுடன், அவற்றில், பாதுகாப்பான அளவில் எடை ஏற்றப்பட்டுள்ளதா என்பதும் சோதனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு, ஒண்டாரியோ மாகாண காவல்துறை மேற்கொண்ட இதே மாதிரியான ஒருநாள் போக்குவரத்து பாதுகாப்பு கண்காணிப்புக்களில், பாரவூர்தி ஓட்டுனர்கள் மீது, 700க்கும் மேலான குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 63 பாவனைக்கு பொருந்தாத பாரவூர்திகள் அகற்றப்பட்டிருந்தன.