கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் உள ஆரோக்கிய கேடுகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமையினால் மக்கள், ஆரோக்கிய பாதிப்புக்களினால் சிக்கியுள்ளனர்.
Ipsos என்ற நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பணவீக்கம் மற்றும் வங்கி வட்டி வீத என்பனவற்றின் அதிகரிப்பு காரணமாக அழுத்தங்களை எதிர்நோக்குவதாக சுமார் 39 வீதமான ஒன்றாரியோ மாகாண பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
நிதி நெருக்கடி நிலைகைமளினால் நண்பர்களுடன் பொழுது கழிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மக்கள் தவிர்த்து வருவதாக சுமார் 26 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தனிமையை உணர நேரிடுவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற சுமார் இருபது வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக இவ்வாறு அழுத்தங்களை எதிர்நோக்குவதாகவும் இது தமது உள ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.