Reading Time: < 1 minute

கனடாவின் நோவா ஸ்கோட்டியா பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இவ்வாறு தேவாலயம் விற்பனை செய்யப்பட உள்ளது.

புனித பேனட் தேவாலயமே இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளதுஃ

சுமார் 1300 சதுர மீட்டர் பரப்பளவினை கொண்ட கட்டிடமே இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளது.

தற்பொழுது இந்த தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 ஆக குறைவடைந்துள்ளது.

இந்த தேவாலயம் 250000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

கனடாவின் கிழக்கு பகுதியில் காணப்படும் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாக புனித பெனாட் தேவாலயம் கருதப்படுகின்றது.

இந்த தேவாலயத்தை புனரமைப்பதற்கு பெருந்தொகை பணம் தேவைப்படும் என குறித்த தேவாலயத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

தேவாலய கட்டிடம் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் புனித பொருட்கள் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கோடை காலத்திலேயே இந்த தேவாலயம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.