Reading Time: < 1 minute

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில், கடந்த ஓராண்டாக பிடியாணை மூலம் தேடப்பட்டு வந்த 35 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து நோவா ஸ்கோஷியா பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tamil Business Directory

லோயர் சாக்வில் பகுதியைச் சேர்ந்த டேவிட் கோர்டன் அலெக்சாண்டர் ஃபோர்ப்ஸ் என்ற 35 வயது நபர், கடந்த 2025 செப்டம்பர் முதல் மாகாண அளவிலான பிடியாணை மூலம் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

5,000 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களை இரண்டு முறை திருடியமை, குற்றச்செயல் மூலம் பெறப்பட்ட 5,000 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள சொத்துக்களை இரண்டு முறை தன் வசம் வைத்திருந்தமை, திருடப்பட்ட கிரெடிட் கார்டை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனைப் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஃபோர்ப்ஸ் இருக்கும் இடத்தை கண்டறிய தங்களுக்கு உதவியாக இருந்த பொதுமக்களுக்கு நோவா ஸ்கோஷியா காவல்துறை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.