Reading Time: < 1 minute

நோர்த் யோர்க்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tamil Business Directory

டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாத்தர்ஸ்ட் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் பகுதிக்கு அருகில் பணியில் இருந்த அதிகாரிகள், ஏற்கனவே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் தொடர்புடைய பெண் ஒருவரைக் கண்டு அடையாளம் கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அப்பெண் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் தொராண்டோவைச் சேர்ந்த 40 வயதான டயானா போஸ்கோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மீது ‘பிணை நிபந்தனைகளை மீறியமை’ தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த குற்றச்சாட்டு இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் திங்கள்கிழமை பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-3505 என்ற எண்ணில் தொராண்டோ பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.