முதலாம் உலகப் போரில் உயிரிழந்த கனேடியர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதலாம் உலகப் போரின் போது பல போர்களில் பங்கேற்ற படைவீரர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு நூற்றாண்டு காலப் பகுதியின் பின்னர் இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹரி அத்தர்டன் என்னும் கனேடிய படைவீரரின் சடலமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக குறித்த நபரின் சடலம் பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சடலம் தொல்லியல் மற்றும் விஞ்ஞான ரீதியான பல்வேறு வழிகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
1917ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி பிரான்ஸில் அத்தர்டன் போரில் ஈடுபட்டதாக தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அத்தர்டன் தனது 24ம் வயதில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.