கடந்த வாரம் பெரிய நிதி சவால்களை அறிவித்ததிலிருந்து பொதுமக்களிடமிருந்து 600,000 டொலர்கள் நன்கொடைகளைப் பெற்றதாக வன்கூவர் நீர்வாழ் காட்சிசாலை தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த பணம் அதன் 70,000 உயிரினங்களை இரண்டரை வாரங்களுக்கு பராமரிக்க மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஷன் வைஸின் தலைமை நிர்வாக அதிகாரியான லாஸ் குஸ்டாவ்சன் இதுகுறித்து கூறுகையில், ‘மாகாண அல்லது மத்திய அரசாங்கங்களின் ஆதரவு தொகுப்பு இல்லாமல், நிறுவனம் ஜூன் மாதத்தில் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்’ என கூறியுள்ளார்.
மேலும், வன்கூவர் நீர்வாழ் காட்சிசாலையை கொவிட்-19 தொற்றுநோயின் விளைவாக கடந்த மார்ச் 17ஆம் திகதி மூடியதிலிருந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக குஸ்டாவ்சன் கூறுகிறார்.
வன்கூவர் நீர்வாழ் காட்சிசாலையில், பரிசுக் கடை, கஃபே மற்றும் நுழைவுக் கட்டணம் மூலம் மாதாந்திர சராசரி வருவாயில் 3.3 மில்லியன் டொலர்கள் ஈட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.