கனடிய பொருளாதாரம் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது.
எனினும் கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சரிவினை சந்திக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பொருளாதார வளர்ச்சி வேகம் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்தளவில் பதிவானது கடந்த 2023ம் ஆண்டில் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நான்காம் காலாண்டு பகுதியில் ஓரளவு பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்றுமதி வர்த்தக அதிகரிப்பு ஊடாக பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.