Reading Time: < 1 minute

அல்பர்டாவில் தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்ஸா மாடல் எஸ் ரக காரை பொலிஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காரை ஓட்டிச்சென்ற பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 20 வயதான நபர் மீது ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்லா கார்கள், இரண்டு நிலை ஒட்டோ பைலட் செயற்பாடு கொண்டவை. ஆனால், ஓட்டுநர் எப்போதும் விழிப்புடனே இருப்பது அவசியம்.