Reading Time: < 1 minute

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கனேடிய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், இதேபோன்ற மேலும் 12 உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Business Directory

மொன்றியலைச் சேர்ந்த 24 வயதான Bérengère Deveaux-Cattino, மருத்துவப் படிப்பை முடித்ததைக் கொண்டாடுவதற்காக 2025 ஜூன் மாதம் தனது தோழிகளுடன் துருக்கிக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.

இஸ்தான்புல்லில் உள்ள Seven Days Hotel விடுதியில் தங்கியிருந்த அவர், திடீரென வாந்தி மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, 2025 ஜூன் 17ஆம் திகதி உயிரிழந்தார்.

உணவு நச்சுத்தன்மையே மரணத்துக்குக் காரணம் என துருக்கி மருத்துவ அறிக்கை தெரிவித்திருந்தாலும், கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், CBC மற்றும் Radio-Canada ஊடகங்கள் மேற்கொண்ட விசாரணையில், விடுதிகளில் மூட்டைப்பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்த மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதேபோன்று இஸ்தான்புல்லில் உயிரிழந்த ஜேர்மனியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் மரணத்திலும் பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மை தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இஸ்தான்புல் சுற்றுலா விடுதிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் குறித்து கனேடிய அரசு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும், கனேடிய இளம்பெண்ணின் மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.