Reading Time: < 1 minute

கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகள், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

அவ்வகையில், கனடா தற்காலிக குடியிருப்பு அனுமதிகளில் மாற்றம் செய்ய திட்டமிட்டுவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் வீட்டுவசதி, கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் துறை அமைச்சரான Sean Fraser இந்த விடயம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னர் புலம்பெயர்தல் துறை அமைச்சராக இருந்தபோது சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவாக பேசிவந்த Sean Fraser, பின்னர் வீட்டுவசதித்துறை அமைச்சரானதும், அப்படியே ஒரு அந்தர் பல்டி அடித்து, வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள்தான் காரணம் எனபது போல ஒரு அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இப்போதும் அவர் அதைத்தான் மறைமுகமாக கூறியுள்ளார் எனலாம். அதாவது, கனடா வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் Sean Fraser.

இந்த தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளவர்கள் என்னும் வகையின் கீழ்தான் சர்வதேச மாணவர்களும், பணி விசாவில் கனடா வருபவர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.