Reading Time: < 1 minute

கனடாவில் கொவிட் 19 தடுப்பூசி போடாத நோயாளிளுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் பராமரிக்க மறுக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதாக கனேடியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கூறுகின்றனர்.

நானோஸ் நடத்திய புதிய கருத்துக் கணிப்பொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நானோஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளில் பிரகாரம் மருத்துவர்களின் இந்த முடிவை 40 வீத கனேடியர்கள் ஆதரிக்கின்றனர்.

24 வீதம் பேர் தடுப்பூசி போடாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதை ஓரளவுக்கு ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

21 வீதம் பேர் தடுப்பூசி போடாத நோயாளிகளை அச்சுறுத்தும் அல்லது அவமதிக்கும் வகையில் சுகாதாரப் பணியாளர்கள் சிகிச்சையை அளிக்க மறுப்பதை எதிர்ப்பதாகக் கூறினர்.

11 வீதம் பேர் இந்த முடிவை ஓரளவு எதிர்ப்பதாகவும் நான்கு வீதம் பேர் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளனர்.

கியூபெக்கில் 29 வீதமானவர்கள் தடுப்பூசி போடாத தொற்று நோயாளிளுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் பராமரிக்க மறுக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள அதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 50 வீதம் பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக

நானோஸ் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, அலுவலகங்களில் பணியாற்றுவோர் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்ற அரசின் கட்டுப்பாடுகள் சரியானவை என 63 வீத கனேடியகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்தக் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையானவை என 14 வீதம் பேர் கூறியதாக நானோஸ் தெரிவிக்கிறது.

செப்டம்பர் 30 முதல் ஒக்டோபர் -03 வரையான காலப்பகுதியில் தொலைபேசி மற்றும் இணைய தளம் மூலமாக ஏழுமாற்றான வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,017 கனடியர்கள்களிடம் இது தொடர்பில் கருத்தறிந்து நானோஸ் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.