Reading Time: < 1 minute

கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தடமறிதல் கண்காணிப்பு பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய கூட்டாட்சி அரசு விரைவில் கடுமையாக பரிந்துரைக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய கூட்டாட்சி தொற்றுநோய்க்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) தெளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘ஒரு நாளைக்கு 3,600 தொடர்பு தடமறிதல் அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய கூட்டாட்சி ஊழியர்களுக்கு மத்திய அரசு பயிற்சி அளித்துள்ளது.

மேலும், புள்ளிவிபர கனடா மேலும் 1,700 நேர்காணல் செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 20,000 அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய பயிற்சி அளித்துள்ளது.’ என கூறினார்.

இதற்கிடையில், கூட்டாட்சி ஊழியர்கள் ஒரு நாளைக்கு, வாரத்தில் ஏழு நாட்களும் ஆயிரக்கணக்கான தொடர்புத் தடங்களை அழைக்கத் தயாராக உள்ளனர்.