Reading Time: < 1 minute

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து கனடாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லாபிலான்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர், கனடிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்டவர்களை சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் தரப்பினர் கனடியர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சகல நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ட்ராம்ப் மீதான தாக்குதலுடன் கனடாவிற்கு தொடர்பு இல்லை என்ற போதிலும், அமெரிக்கப் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.