Reading Time: < 1 minute
கனடாவின் டொரொண்டோ நகரின் ஹார்பர்ஃப்ரண்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலை 5:51 மணியளவில் யோர்க் தெரு மற்றும் லேக் ஷோர் புல்வர்டு மேற்கு பகுதியில் ஒருவருக்கு துப்பாக்கிச் சூடு ஏற்பட்டதாக பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரை மீட்க முயன்றும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்தக் கொலை வழக்கை தொடர்ந்து காவல்துறையின் கொலைக் குற்ற விசாரணைப் பிரிவு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.