கனடாவின் டொரொண்டோ, ஸ்கார்பரோ பகுதியில் இரண்டு பாலியல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நகர பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்கார்பரோ டவுன் சென்டரில் ஒரு பெண் தனது நண்பருடன் பொருள் கொள்வனவில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நபர் அவரை பின்னால் இருந்து அணுகி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
அதன்பிறகு, பாதிக்கப்பட்டவரின் நண்பரை கொடூரமாக முட்டி குத்தி தப்பியோடியுள்ளார்.
McCowan & Ellesmere சாலைகளில் உள்ள TTC (Toronto Transit Commission) நிலையத்திற்கருகில் ஒரு பெண் பஸ்ஸிற்காக காத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது, அதே சந்தேக நபர் பின்னால் இருந்து வந்து பாலியல் வன்முறை செய்து, அதனைத்தொடர்ந்து தப்பி ஓடியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் இந்த இரு சம்பவங்களிலும் ஒரே நபரே சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர் ஆறு அடி உயரத்தையும், தடிப்பான உடல் அமைப்பினையும் குறுகிய கருப்பு தாடி வைத்திருப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபரைப்பற்றிய எந்த தகவலும் தெரிந்தால், அல்லது அவரை அடையாளம் காண முடிந்தால், டொரொண்டோ போலீசாரை உடனடியாக தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.