டொரன்டோ உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஆறு மாணவர்கள் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
டொரன்டோ மாவட்ட கத்தோலிக்க பாடசாலை சபையின் நிர்வாகத்தில் இயங்கி வரும் Father John Redmond பாடசாலையில் இவ்வாறு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடத்தில் 8 மாணவர்கள் சிறந்த பெருவேறு பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் ஆறு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 100 வீத புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த மாணவர்கள் இன்ப அதிர்ச்சியை வழங்கியதாகவும் இவர்கள் சிறந்த திறமை உடையவர்கள் என்பது தமக்கு தெரிந்தது எனவும் பள்ளிக்கூடத்தின் அதிபர் ஜோன் டொனோபிரியோ (John D’Onofrio) தெரிவித்துள்ளார்.
அமிலியா டெம்போலி (Amelia Campoli), ஹொனோரா மார்பி ( Honora Murphy) டானோ நியான் (Tano Nguyen), நாட்டாலியா சுலிக் (Natalia Zulek), ஸாசாச்ரி ஸெரி (Zachary Xerri ) மற்றும் ரோபோட் சூம்பெக் ( Robert Zupancic) ஆகிய 6 மாணவர்களும் இவ்வாறு 2022 -2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடசாலை தேர்வில் 100 வீத சராசரி புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த மாணவர்கள் சீரிய ஒழுக்கத்தையும், மிகுந்த அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் வெளிப்படுத்தியதாகவும் இவர்கள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அதிபர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.