கனடாவில் களவாடப்பட்ட 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
டொரன்டோ போலீசார் இவ்வாறு களவாடப்பட்ட பெருந்தொகை வாகனங்களை மீட்டுள்ளனர்.
சில மாதங்களாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
27 மில்லியன் டாலர்கள் பெறுமதி
குறிப்பாக இட்டோபீகோக் பகுதியை அண்டிய இடங்களில் இந்த வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் அடிப்படையில் இதுவரையில் களவாடப்பட்டிருந்த 556 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவற்றின் சந்தை பெறுமதி 27 மில்லியன் டாலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் பலர் டொரன்டோ பெரும் பாகப் பகுதியில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வாகன கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக 314 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது எனவும் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.