Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடிய பொருட்களுக்கு 25 வீத வரி விதித்ததை தொடர்ந்து, ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட் கடுமையான பதிலடி எடுக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா எங்களை முடக்க முயற்சிக்கிறதா? அதற்கு நாங்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை,” என போர்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்டாரியோவில் இருந்து நிக்கல் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்படும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க மதுபானங்கள் ஒன்டாரியோ மதுபானக் கடைகளில் விற்கத் தடை விதிக்கப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களுடன் ஒன்டாரியோ அரசு செய்யும் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

நியூயார்க், மிச்சிகன், மின்னசோட்டா மாநிலங்களுக்கு ஒன்டாரியோ மின்சாரம் விநியோகம் செய்து வருகின்றது.

இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்காவிற்கு மின்சார விநியோகம் நிறுத்தப்படும்,” என்று போர்ட் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா எங்கள் குடும்பங்களையும், பொருளாதாரத்தையும் அழிக்க நினைத்தால், நாங்களும் பதிலடி தர தயார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் வரிகள் கனடா-அமெரிக்கா பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்குமென போர்ட் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.