டிக்டாக் பயன்பாட்டு தடை தொடர்பில் கனேடிய அரசியல் தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
கனடாவின் அநேகமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் டிக்டாக் கணக்குகளை முடக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் அந்தரங்கத் தகவல்கள் கசிவு போன்ற காரணிகளின் அடிப்படையில் அரசாங்க சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் கனடாவின் முன்னணி அரசியல்வாதிகள் பலரும் தங்களது டிக்டாக் கணக்குளை முடக்கிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரே பொலிவிர், என்டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் உள்ளிட்ட உள்ளிட்டவர்கள் இவ்வர்று கணக்குளை முடக்கிக் கொண்டுள்ளனர்.
880000 பின்தொடர்வாளர்களைக் கொண்டுள்ள டக்மீட் சிங் தனது டிக்டாக் கணக்கை முடக்கிக் கொண்டுள்ளார்.
பாரதூரமான பாதுகாப்பு பிரச்சினை இருப்பதன் காரணமாக இவ்வாறு கணக்கினை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.