அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புகழாரம் சூட்டியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த அறிவிப்பு குறித்த தங்களது நிலைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கனடிய பிரதமரும் இந்த அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ஜோ பைடன் சிறந்த மனிதர் என ட்ரூடோ புகழாரம் சூட்டியுள்ளார்.
நீண்ட ஆண்டுகளாக பைடனை தாம் நன்கு அறிவதாகவும், நாட்டின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் எனவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
பைடன், நல்ல நண்பர் எனவும் கணடியர்களுக்கு பங்காளி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோருக்கு தாம் நன்றி பாராட்டுவதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.