Reading Time: < 1 minute

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்;டுள்ளது.

நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.

ஊழல் வழக்கு விசாரணையில் அவர் கனடா சட்டத்தை மீறியுள்ளதாக குறித்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஆணையாளரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.