Reading Time: < 1 minute

ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனவரி 9 ஆம் திகதி முதல் நான்கு நாள் சுற்றுப்பயணமாக இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 70 வது ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் அவரது விஜயம் அமையவுள்ளது.

இலங்கை வரும் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, நாட்டுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் தலைமையிலான கடனாளிகள் குழு கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பது மற்றும் வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான அடிப்படை உடன்பாட்டை கடந்த மாதம் எட்டியது.

இதனை அடுத்து கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் அவசியம் என ஜப்பானிய நிதியமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.