Reading Time: < 1 minute

கனடிய அரசாங்கம் சூடானிய மக்களுகு;கு வீசா வழங்கத் தீர்மானித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வீசா வழங்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அதிகளவான சூடானியர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த புதிய நடைமுறை குறித்து அறிவித்துள்ளார்.

சூடானில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் சூடானிய பிரஜைகளுக்கு கனடிய வீசா வழங்கப்பட உள்ளது.

கனடாவில நிரந்தர வதிவிடவுரிமை உடைவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறு வீசா வழங்கப்பட உள்ளது.

கனடாவில் நிதி ரீதியாக உதவக்கூடியவர்களது சூடான் வாழ் உறவினர்களுக்கு இவ்வாறு வீசா வழங்கப்பட உள்ளது.

எவ்வாறெனினும், எவ்வாறான நிதி ரீதியான உதவி என்பது பற்றிய பூரண விபரங்களை குடிவரவு அமைச்சு வெளியிடவில்லை.