உலகில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் பட்டியலில் கனடா 9, இந்தியா 34ஆவது இடத்தில் உள்ளது என உலக பொருளாதார மன்ற அறிக்கை கூறுகிறது.
உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண , சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 6 இடங்கள் முன்னேறி உள்ளது. இந்தியாவின் தரவரிசை 40-வது இடத்திலிருந்து 34-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய சுற்றுலா போட்டித்திறன் குறியீடு, ஒரு நாட்டின் வளர்ச்சி, போட்டித்திறனுக்கு பங்களிக்கும் சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சிக்கு உதவும் காரணிகள் , கொள்கைகளின் தொகுப்பை அளவிடுகிறது. அதன்படி உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண, சுற்றுலா போட்டித்திறன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 140 நாடுகளின் ஒப்பீட்டு பலத்தை தரவரிசைப்படுத்தி உள்ளது. இதில் ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ், ஜெர்மனி , ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
முன்பு வெளியான பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்த இங்கிலாந்து 6ஆவது இடத்திலும், தொடர்ந்து ஆஸ்திரேலியா (7), இத்தாலி (8), கனடா (9), சுவிட்சர்லாந்து (10) நாடுகள் உள்ளன.
கடந்த முறை 40 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 34ஆவது இடத்தில் உள்ளது. துணை பிராந்திய கண்ணோட்டத்தில், இந்தியா, சிறந்த விமான உள்கட்டமைப்பில் 33ஆவது இடம், தரை துறைமுக உள்கட்டமைப்பில் 28ஆவது இடம், சர்வதேச திறந்தநிலையில் 51ஆவது இடம், இயற்கையில் 14ஆவது இடம், கலாச்சார வளங்களில் 8ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரம் சுற்றுச்சூழலில் 98ஆவது இடம், சுற்றுலா சேவை உள்கட்டமைப்பில் 109ஆவது இடம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் 128ஆவது இடத்தில் உள்ளது.
பிலிப்பைன்ஸ் நான்கு இடங்களை முன்னேற்றி உலக அளவில் 75-வது இடத்தைப் பிடித்து உள்ளது. பாகிஸ்தான் 121ஆவது இடத்தில் உள்ளது. ஜப்பான் ஆசியாவின் மிகவும் பயண, சுற்றுலா பொருளாதார நாடாக உள்ளது. உலகளவில் 4ஆவது இடத்தில் உள்ளது. சீனா ஆசிய-பசிபிக் பகுதியில் மிகப்பெரிய பயண, சுற்றுலா பொருளாதார நாடாகவும் , உலகளவில் 13ஆவது இடத்திலும் உள்ளது.