சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியரை பீஜிங்கில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், எனினும் இந்தச் சந்திப்பு குறித்த மேலதிக விபரங்களை அந்தரங்க இரகசியப் பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது என்றும், தொடர்ந்தும் அவருக்கான தூதரக உதவிகள் வழங்கப்படும் என்றும் வெளியுறவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த இந்தக் கைதினை சீன அரசின் தன்னிச்சையான நடவடிக்கை என்று பலதடவை சுட்டிக்கட்டியுள்ள கனேடிய அரசாங்கம், இந்த தடுத்து வைப்பு குறித்த தனது கரிசனைகளையும் மீண்டும் மீண்டும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவேளை கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், அங்கு சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தபோது குறித்த இந்த விடயம் தொடர்பிலும் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.