கனடாவில் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு சலுகை வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இவ்வாறு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கார்பன் வரி மீள் கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது.
நீண்ட காலமாக கார்பன் வரி மீள்கொடுப்பனவு தொகை வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு இறுதியில் குறித்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் இது தொடர்பில் அறிவித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சுமார் ஆறு லட்சம் வியாபார நிறுவனங்களுக்கு 2.5 பில்லியன் டொலர்கள் இவ்வாறு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-2020 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் திரட்டப்பட்ட கார்பன் வரி வருமானத்தின் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
வியாபார நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கொடுப்பனவுத் தொகை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.