லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயத்தில் முன்னெடுக்கப்படும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கனடா பிரதாமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்பார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்காக லண்டனுக்குச் செல்லும் கனேடிய அரசாங்கக் குழுவின் மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயத்தில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளில் 2,000 பேர்கள் வரையில் பங்கெடுக்க முடியும். சாரலஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்,
ஸ்கொட்லாந்தின் புதிய முதல்வர் ஹம்ஸா யூசுஃப், மொனாக்கோவின் இளவரசர் ஆல்பர்ட், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதனிடையே, கனேடிய மக்களில் 60 சதவீதம் பேர்கள் சார்லஸை மன்னராக அங்கீகரிப்பதை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.