Reading Time: < 1 minute

கனடாவின் சவுத் ஹூரோன் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவர், வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

கிர்க்டன் வீதியில், கோஷென் வீதி மற்றும் பாபிலோன் லைன் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்து தமக்குத் தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஹூரோன் கவுண்டி ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிக்-அப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தில் தனியாகப் பயணித்த குறித்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணைகள் காரணமாக கிர்க்டன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.