Reading Time: < 1 minute

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் இதனைக் தெரிவித்தார்

மேலும் இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் எதிர்வரும் மூன்றாவது மீளாய்வை விரைவாகக் கண்காணிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

இதேவேளை புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு குறுகிய காலம் என்றும் எனது தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று கலந்துரையாடல்களுக்காகவும் அதிகாரிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவும் இலங்கைக்கைகு சென்றது. புதிய அரசாங்கத்துடனும் அவர்களது குழுவுடனும் நாங்கள் பல சுற்றுகள் மிகவும் வெற்றிகரமான கலந்துரையாடல்களை நடத்தினோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.