Reading Time: < 1 minute
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீளாய்வு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளின் 80% தற்போது நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சூதாட்ட மற்றும் பந்தய வரி திருத்தம் தொடர்பான விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.