Reading Time: < 1 minute
33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.