Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுடன் முன்னேறுவது குறித்து, சீன அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வேலை தடையின்றி தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து சீன அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

உலகளாவிய தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு தடுப்பூசியை உருவாக்க உலகின் சில சிறந்த ஆராய்ச்சியாளர்கள் கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம்’ என கூறினார்.

சீன அரசாங்க விஞ்ஞானிகளுடன் சேர்ந்து மருந்து நிறுவனமான கேன்சினோ பயோலாஜிக்ஸ் உருவாக்கிய எடி5-என்சிஓவி (Ad5-nCoV)க்கான சோதனைகள், மே மாதத்தில் ஹெல்த் கனடா மனித சோதனைக்கு ஒப்புதல் அளித்த பின்னர் நடைபெற இருந்தது. ஆனால் முன்னேற்றம் தடைபட்டுள்ளது. மருந்தை கனடாவுக்கு அனுப்ப சீன அரசாங்கம் இன்னும் கையெழுத்திடவில்லை என்று கனேடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.