கனடாவில் ஜூன் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 124பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 90பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜூன் 4ஆம் திகதி 109பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு, தற்போதுதான் நாளொன்றுக்கான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 62ஆயிரத்து 659பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 409பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 15ஆயிரத்து 636பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 614பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் 126பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.