Reading Time: < 1 minute
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 063பேர் பாதிக்கப்பட்டதோடு 46பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 85ஆயிரத்து 278பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 612பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29ஆயிரத்து 277பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 122பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 30ஆயிரத்து 389பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.