Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு 53பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 87ஆயிரத்து 152பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 445பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 80ஆயிரத்து 201பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 928பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை ஒன்பது இலட்சத்து 83ஆயிரத்து 506பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.