Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50ஆயிரத்தை நெருங்குகிறது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 49ஆயிரத்து 94பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 341பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 49ஆயிரத்து 094பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 249பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 11ஆயிரத்து 138பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 707பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 88பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.