Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 956பேர் பாதிக்கப்பட்டதோடு, 42பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 28 ஆயிரத்து 542பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 074பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 27ஆயிரத்து 259பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 91ஆயிரத்து 209பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 228பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.