Reading Time: < 1 minute

கனடாவின் அனைத்து பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் அதேபோன்று கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது.

அத்துடன், குறித்த பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் இன்னல்களுக்கு முங்கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடும் வெப்பம் காரணமாக இரவு நேரங்களில் மக்கள் வீடுகளின் ஜன்னல்களை திறந்து வைப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதனை சாதகமாக பயன்படுத்தி திருடர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என கனேடிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

இதேவேளை, இதுபோன்ற எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகளிலும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.