Reading Time: < 1 minute

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று, தற்போது கனடாவிலும் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 19 பேருக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவின் வுஹான் சென்று ரொறன்ரோவுக்கு வந்திருக்கும் 50வயது மதிக்கத்தக்கவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதனை, ஒன்ராறியோவின் சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியம்ஸ், உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் குறித்த நோயாளியின் மனைவியும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த தம்பதியினர், சுயமாக தனிமையில் இருந்ததால், ஒன்றாரியேர்களுக்கு ஆபத்து குறைவாகவே உள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கிடையில், சீனாவின் ஹூபே மாகாணத்திற்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.