கொரோனா வைரஸ் மற்றும் அதன் பரந்த சமூகத் தாக்கங்களை ஆய்வு செய்ய உதவுவதற்காக ஹலிஃபக்ஸில் உள்ள டல்ஹெளசி பல்கலைக்கழகத்தின் (Dalhousie University) மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு மொத்தம் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.
நோயின் தீவிரத்தை அறிய ஒரு சாதனத்தை உருவாக்குதல், பொதுச் சுகாதாரக் கொள்கையின் பங்கை ஆராய்வது மற்றும் தவறான தகவல்களின் பரவலை நிவர்த்தி செய்வது ஆகியவை ஆராய்ச்சிப் பகுதிகளில் அடங்கும்.
இந்த நிதி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் மொத்தம் 27 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்ததன் ஒரு பகுதியாகும் என்று மத்திய சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து தெரிவித்துள்ளார்.
டால்ஹெளசியின் மருத்துவ பீடத்தில் நோயெதிர்ப்பு நிபுணரான டொக்ரர் டேவிட் கெல்வின், டல்ஹெளசியில் குழந்தை மருத்துவம், நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறை பேராசிரியரான டொக்ரர் ஸ்கொட் ஹால்பெரின், டால்ஹெளசியின் சுகாதார பீடத்தின் மருத்துவ சமூகவியலாளரும் உதவிப் பேராசிரியருமான ஜீன்னா பார்சன்ஸ்லே ஆகியோருக்கே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.